மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே. வாசன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்.
மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே. வாசன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்.
நெடுவாசலுக்கு சனிக்கிழமை வந்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் திட்டம் செயல்படுத்தபட உள்ள இடம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியது: 80 கி.மீ. தொலைவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதபோன்ற எரிவாயு சோதனைகளை பாலைவனம், கடலோரப் பகுதியில்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, மக்கள் வசிப்பிடங்களில் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன. இதனால் தற்போது ஹைட்ரோ கார்பன் எனப் பெயரிட்டு மக்களை திசை மாற்ற, மத்திய அரசு முயற்சிக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களின் விருப்பம்தான் இறுதியாக இருக்க வேண்டும். எதையும் அவர்களிடத்தில் திணிக்கக் கூடாது.
மனித உயிருக்கும், விவசாயத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இத்திட்டத்தைக் கைவிட்டு, மக்கள் ஏற்கும், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மட்டுமே பாஜக அரசு செயல்படுத்த வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டு வந்தார்கள் என்று பாஜகவினர் கூறுவதை ஏற்க முடியாது என்றார் வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com