பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனை பாதிக்கும் அபாயம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், வங்கிகளை தனியார்

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (பிப். 28) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின்னர், வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களுக்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே, ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அதை அதிகரித்து தர வேண்டும். வங்கிகளைத் தனியார் மயமாக்கக்கூடாது. வாராக்கடனை முழுவதுமாக வசூலிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் - வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யு.எஃப்.பி.யு.) இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதையடுத்து பிப்ரவரி 28-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என யு.எஃப்.பி.யு. அறிவித்தது. இதில் நாடு முழுவதும், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தப் போராட்டத்தில், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை, தனியார்துறையைச் சேர்ந்த 7,000 வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com