பேரவையின் கொள்கை அறிவிப்பை ரத்து செய்தார் தீபா

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் கொள்கை அறிவிப்பு, நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளை தீபா ரத்து செய்தார்.
பேரவையின் கொள்கை அறிவிப்பை ரத்து செய்தார் தீபா

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் கொள்கை அறிவிப்பு, நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளை தீபா ரத்து செய்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-இல் புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கிய அவரது அண்ணன் ஜெயகுமார் மகள் தீபா, தன்னை பொருளாளராக அறிவித்துகொண்டார். இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தீபா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர், தலைவராக சரண்யாவையும், செயலராக ஏ.வி.ராஜாவையும் நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த தீபா, ’பேரவையின்
செயலராகவும் நானே செயல்படுவேன். நிர்வாகிகளை இறுதி செய்யும் பணி நடைபெறுகிறது. திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நிர்வாகிகள் பட்டியலும், கொள்கையும் வெளியிடப்படும்' என்றார்.
அப்போது, அவருடைய இல்லத்துக்குள் திடீரென புகுந்த தொண்டர்கள் சிலர் ஏ.வி.ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துகொண்டு தீபா கிளம்பினார்.
இந்த நிலையில், தீபாவின் இல்லத்துக்கு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு சென்ற பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க தீபா ஆதரவாளர்கள் மறுத்தனர்.
இதையடுத்து, ’கொள்கை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. நிர்வாகிகள் பட்டியல் வெளியீடும் இப்போதைக்கு இல்லை' என்று தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:-
தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதை தீபா எதிர்பார்க்கவில்லை. இதனால்,
யோசித்து செயல்பட முடிவு செய்திருக்கிறார். மாவட்ட வாரியாக பயணம் செய்து, தொண்டர்களின் கருத்துகளை அறிந்த பின்னரே நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்படும். பேரவையின் கொள்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com