கனடாவில் தைப் பொங்கல் - தமிழ் மரபுத் திங்கள் விழா

தைப் பொங்கல் விழா கொண்டாடும் ஜனவரி மாதம் தமிழ் மரபுத் திங்கள் விழாவாக கனடாவில் வரும் 13,14,15 ஆகிய நாள்களில் கொண்டாடப்படுகிறது.
கனடாவில் தைப் பொங்கல் - தமிழ் மரபுத் திங்கள் விழா

தைப் பொங்கல் விழா கொண்டாடும் ஜனவரி மாதம் தமிழ் மரபுத் திங்கள் விழாவாக கனடாவில் வரும் 13,14,15 ஆகிய நாள்களில் கொண்டாடப்படுகிறது.

கனடாவில் உள்ள மார்கம் மாநகராட்சி, லோகன் கணபதியின் முயற்சியால் கடந்த 2011-முதல் குறிப்பிட்ட நாள்களில் தமிழ் மரபு திங்கள், தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் என அலுவலக அளவில் அறிவித்து கொண்டாடி வருகிறது.

இதேபோல், கனடா நாட்டின் ஒண்டரியோ மாகாணத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும், பள்ளிகளிலும் இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கனடா நாடாளுமன்றம், அரி ஆனந்த சங்கரி கொண்டுவந்த தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்று இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடுவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பேசப்படும் மொழிகளுள் மிகத் தொன்மையான மொழியாக இருக்கிற தமிழ்மொழி, இந்தியாவில் செம்மொழியாகவும் சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகவும், இலங்கையில் தேசிய மொழியாகவும், தமிழகத்தில் ஆட்சிமொழியாகவும் இருந்து வருகிறது.

இதனால் கனடாவில் வசிக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இவ்வாண்டு முதல் தைப்பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட உள்ளனர். மேலும், இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மார்கம் மாநகராட்சி மேயர் ஸ்கார்பிட்டி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com