புதுகை அருகே நடத்த முயற்சி: தடுத்து நிறுத்திய போலீஸார்

புதுக்கோட்டை, தடிகொண்ட அய்யனார் திடலில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி, போலீஸாரால் முறியடிக்கப்பட்டது.
புதுகை தடிகொண்ட அய்யனார் திடலில் திரண்ட பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்த போலீஸார்.
புதுகை தடிகொண்ட அய்யனார் திடலில் திரண்ட பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்த போலீஸார்.

புதுக்கோட்டை, தடிகொண்ட அய்யனார் திடலில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி, போலீஸாரால் முறியடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராப்பூசல், பூங்குடி உள்ளிட்ட கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்ததால், கோயில் காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், சம்பிரதாயத்துக்காக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
பின்னர், மழையூர், பொன்னன் விடுதி, புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடல் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுக் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தடிகொண்ட அய்யனார் திடலில் அப்பகுதி இளைஞர்கள் வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் தயாராக இருந்தனர். தகவலறிந்து வந்த புதுகை காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். பாலகுரு தலைமையிலான போலீஸார் வாடிவாசலை அகற்றினர். எனினும், சில காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால், போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால், ஜல்லிக்கட்டு போட்டி போலீஸாரால் முறியடிக்கப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விட்டதாக, பாண்டி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com