புதுவரவில் நல்வரவு: பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

பிற நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதில் முக்கியமான உளவாளிகள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.
புதுவரவில் நல்வரவு: பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

ஆசிரியர்: ஆலிவர் ஹெம்பர்
பிற நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதில் முக்கியமான உளவாளிகள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.
அமெரிக்காவின் சிஐஏ, ரஷியாவின் கேஜிபி, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, இந்தியாவின் ரா, பிரிட்டனின் எம்16 போன்ற அமைப்புகள் உலகின் மிக முக்கியமான உளவு அமைப்புகள் ஆகும்.
இந்த அமைப்புகளின் பணியே வெளிநாட்டு தாக்குதல், தீவிரவாத தாக்குதல்கள் ஆகியவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, தகவல் அளிப்பது மட்டும்தான். அதேபோல இந்த அமைப்புகளின் உளவாளிகள் பிற நாட்டு அரசியல், பொருளாதாரத்தை மாற்றும் அளவுக்கு அரசு இயந்திரத்துக்குள் ஊடுருவி செயல்படுகிறார்கள்.
இந்த உளவாளிகளால் அவரவர் நாடுகளுக்கு நன்மைதான் என்றாலும், அவர்களால் பிற நாடுகள் பாதிக்கப்படுவதை பொருட்படுத்தப்படுவதில்லை. அந்த வகையில் பிரிட்டிஷ் உளவுத்துறையின் உளவாளியாகச் செயல்பட்டவர் ஆலிவர் ஹெம்பர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்த பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைச்சகம் பலரை உளவாளிகளாக அனுப்பியது.
அந்த வகையில், அரபு நாடுகளில் தனக்களித்த பணியை எவ்வாறு செய்து முடித்தார் என்பதை ஆலிவர் ஹெம்பர் ஒப்புதல் வாக்குமூலமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
அந்த நாடுகளில் அவர் எவ்வாறு பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் மூலம் எவ்வாறு ஆதாயம் அடைந்தார்? என்பதையும் விளக்குகிறார். தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைக்கும் ஏகாதிபத்திய நாடுகள் அந்த நாடுகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் காரணத்தையும் அறிய விரும்பும் யாவரும் படிக்க வேண்டிய நூல் பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.
அடையாளம் வெளியீட்டாளர்கள் பதிப்பித்து, இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் வைத்துள்ள இந்த நூல், அதிக அளவில் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com