அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: ம. நடராசன் பேட்டி

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றார் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன்.
தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த ம. நடராசன், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர்.
தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த ம. நடராசன், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர்.

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றார் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த ம. நடராசன், செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஜெயலலிதா மறைந்த இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது சற்று வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதா தானே முன்னின்று இந்த விழாவை நடத்த வேண்டும் என மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியிடத் தயாராக வைத்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில் அவர் மறைந்துவிட்டார்.
என்றாலும், அவரது அறிக்கையின்படி தமிழகம் முழுவதும் தமிழக அரசும், அதிமுகவினரும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
எம்.ஜி.ஆரை பின்பற்றி 29 ஆண்டுகளாக ஜெயலலிதா இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர். அடித்தளம் போட்டு 44 ஆண்டுகள் ஆகிறது. அது மென்மேலும் வலுப்பெற்று வருங்காலத்தில் இளைஞர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்னும் அதை இழுத்துச் செல்வர். கடைசி தொண்டர் உள்ளவரை இந்த அதிமுக என்ற ஆலமரத்தை யாராலும் வீழ்த்த முடியாது.
எம்.ஜி.ஆர். கூறியபடி தாய் வழியில் வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழியில் நின்று பாடுபட்டால் இன்றும் நமதே, நாளையும் நமதே என்றார் நடராசன்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், மலேசிய நாட்டின் கல்வி அமைச்சர் ஒய்.பி. கமல்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com