அலங்காநல்லூரில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை: டிஜிபிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

அலங்காநல்லூரில் அமைதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
அலங்காநல்லூரில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை: டிஜிபிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

அலங்காநல்லூரில் அமைதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தார்.
இந்த மனுவில் கூறியிருப்பது:-
தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டு உரிமை கோரி போராடி வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியுள்ளனர்.
இவர்களுக்கு உணவு வழங்கிய பொதுமக்களை போலீஸார் தடுத்ததாகவும், அலங்காநல்லூர் மக்களை வீட்டுக் காவலில் வைத்ததாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளன.
இந்த நிலையில், ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியோரை கொடுங்குற்றம் புரிந்தவர்களை செவ்வாய்க்கிழமை அதிகாலை சுற்றி வளைத்து, கைது செய்தது வேதனையளிக்கிறது.
இவர்களை விடுதலை செய்யக் கோரி, மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஏற்கெனவே அலங்காநல்லூரை அறிவிக்கப்படாத போர்ப் பகுதியாகச் சித்திரித்து காவல்துறை சார்பில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இனியும் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு தடுத்து நிறுத்திட வேண்டும்.
எனவே, இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்து, அலங்காநல்லூர் பகுதியில் அமைதி திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, டிஜிபி டி.கே.ராஜேந்திரனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு மனு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்தார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச் செயலர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com