காலம் கடந்து...சத்திய சோதனை: மகாத்மா காந்தி

இந்திய விடுதலையை அகிம்சையின் மூலம் வென்றெடுத்தவர் மகாத்மா காந்தி. பல்வேறு இனம், மொழி அடிப்படையில் பிரிந்து கிடந்த இந்திய மக்களை தனது விடுதலை போராட்டத்தால் ஒன்றிணைத்தவர் அவர்.
காலம் கடந்து...சத்திய சோதனை: மகாத்மா காந்தி

இந்திய விடுதலையை அகிம்சையின் மூலம் வென்றெடுத்தவர் மகாத்மா காந்தி. பல்வேறு இனம், மொழி அடிப்படையில் பிரிந்து கிடந்த இந்திய மக்களை தனது விடுதலை போராட்டத்தால் ஒன்றிணைத்தவர் அவர்.
நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், ஆங் சான் சூகி போன்ற புகழ்பெற்ற போராளிகள் மகாத்மா காந்தியாலேயே அகிம்சை போராட்டத்தின் மீது நம்பிக்கை பெற்றனர். அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவில் கருப்பின விடுதலையும், மியான்மரில் ஜனநாயக ஆட்சியும், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஒழிப்பும் நிகழ்ந்தன.
உலகத்தின் பல தலைவர்களுக்கு முன்மாதிரியாக இருந்த மகாத்மா காந்தி, தன் சிறுவயதில் இருந்து நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதினார். தனது வாழ்நாளில் அவர் செய்த தவறுகள், தவறான காரியங்கள் என அனைத்தையும் மறைக்காமல் வெளிப்படுத்தியுள்ளார்.
முதலில் தனது வாழ்க்கை வரலாற்றை நவஜீவன் குஜராத்தி இதழில் வெளியிட்டார். பின்னர் புத்தகமாக 1927-இல் வெளியிடப்பட்டது. இதனை ""தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பரிமென்ட வித் ட்ரூத்'' என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சத்திய சோதனை என்ற பெயரில் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
சத்திய சோதனை நூல் வெளியாகி சுமார் 80 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பலரால் வாங்கிப் படிக்கப்படும் நூலாக திகழ்கிறது. இந்த புத்தகம் 20-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மிக நூல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காந்தியவாதிகள் மட்டுமல்லாமல், இன்றைய இளைஞர்களும் சத்திய சோதனையை அதிகம் வாங்கிப் படிக்கிறார்கள்.
மேலும் தற்போது புத்தகக் கண்காட்சியில் விற்கப்படும் பல அழிவற்ற நூல்களில் ஒன்றாக சத்திய சோதனை திகழ்கிறது. இப்போதும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் படிக்கச் சொல்லும் புத்தகம் சத்திய சோதனைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com