ஜனவரி 22 வரை பாரம்பரிய நகை கண்காட்சி

அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கலைநயமிக்க தங்கம், வைரம், விலைமதிப்பு வாய்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைகளின் கண்காட்சி

அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கலைநயமிக்க தங்கம், வைரம், விலைமதிப்பு வாய்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைகளின் கண்காட்சி சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்டு அன்ட் டைமன்ட்ஸ் நிறுவனத்தின் ஷோரூமில் ஜனவரி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
""கடந்த 15-இல் தொடங்கிய கண்காட்சி ஜனவரி 22-ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் நவீன தொழில்நுட்பத்தில் வடிமைக்கப்பட்டுள்ள நகைகள் இடம்பெற்றுள்ளன.
வைர நகைகளான மைன், பிரம்மாண்டமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா வகை வைர நகைகள், நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான டிவைன், கைவினைக் கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக், மிகவும் பொக்கிஷமாகக் கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா, பாரம்பரிய நகைகளின் தொகுப்பான டிவைன் குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியன இடம்பெற்றுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com