பீட்டா அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் குதித்த ஐ.டி. நிறுவன ஊழியர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் புதன்கிழமை முதல் சென்னையைச் சேர்ந்த ஐ.டி.நிறுவன ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
முன்னதாக அவர்கள் தங்களது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அருகே உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ்-அப்') மூலம் தகவல் அனுப்பினர். அதில் போராட்டம் நடைபெறும் இடங்களை குறிப்பிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை பகல் 1 மணி முதல் தரமணி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள "டைடல் பார்க்', அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆம்பிட் தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க், போரூர் டி.எல்.எஃப் என நகரில் முக்கியப் பகுதிகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் அருகே உள்ள பிரதான சாலைகளில் குவிந்தனர்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழர்களின் கலாசாரத்தையும் கால்நடைகளையும் அழிக்க நினைக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். சாலைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியதால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டப்ஞ். இந்தப் போராட்டத்தில் ஆந்திரம், கேரளம் உள்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.டி.நிறுவன ஊழியர்களும் அதிகளவில் பங்கேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாலை 6 மணி முதல் தொடங்கிய போராட்டம் இரவு 9 மணிவரை நீடித்தது. இதனால் நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com