பீட்டாவுக்கு நன்றி சொல்லும் தமிழர்கள்: எதற்குத் தெரியுமா?

பீட்டா அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் உலக மக்களைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பீட்டாவுக்கு நன்றி சொல்லும் தமிழர்கள்: எதற்குத் தெரியுமா?


பீட்டா அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் உலக மக்களைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அவசரச் சட்டம் மூலம், தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை அறிவித்துள்ளார்.

இதனிடையே, பீட்டாவுக்கு நன்றி கூறி சமூக தளங்களில் சில செய்திகள் பரவி வருகிறது.

அதாவது, ஒரு சில மாவட்டங்களில் (மதுரை) மட்டும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு வருங்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற தூண்டியதற்கு.

ஜல்லிக்கட்டை தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகனைத்திற்கும் தெரிய வைத்ததற்கு.

தமிழர் திருவிழாவையே உலகே திரும்பிப் பார்க்கும் வண்ணம் செய்ததற்கு.

தமிழர்களின் ஒற்றுமையை பார்த்து தமிழர்களே வியக்க மற்றும் மிரள செய்ததற்கு.

பீட்டாவின் முகத்திரையை (பீட்டாவாலே) கிழிந்ததற்கு.

இனி தமிழகத்தில் நான் பீட்டாவை சேர்ந்தவன் என்று சொல்ல யாருக்கும் துணிவு இல்லாமல் செய்ததற்கு.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நினைவுபடுத்தியதற்கு.

எங்க ஊரிலேயும் ஜல்லிக்கட்டு நடத்துங்க என சொல்ல வைத்ததற்கு.

மாணவர்களின் சக்தியை ஒன்றிணைத்து தமிழகத்தின் குரலை சர்வதேச அளவில் ஓங்க உரைக்கச் செய்ததற்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com