புதுச்சேரியில் காளை மாடு வடிவத்தில் திரண்டு நின்ற மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள்!

புதுச்சேரியில் காளை மாடு வடிவத்தில் மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு நின்றனர்.
புதுச்சேரியில் காளை மாடு வடிவத்தில் திரண்டு நின்ற மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள்!

புதுச்சேரியில் காளை மாடு வடிவத்தில் மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு நின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், காளை மாடுகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் கடந்த 4 நாள்களாக தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

புதுச்சேரியில் ஏஎப்டி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக இன்றும் தீவிர போராட்டம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் கலை, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் ஏஎப்டி திடலுக்கு சாரை சாரையாக வந்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் 4-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாடு வடிவத்தில் திரண்டு நின்ற மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com