தில்லிக்கு காளைகளை அனுப்பும் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலியிலிருந்து ரயில் மூலம் தில்லிக்கு காளைகளை அனுப்பும் நூதன போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பிலும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் காளைகளை ஒப்படைப்பதாகக் கூறி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு, மாணவரணி மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாணவரணியினர், கட்சியின் நிர்வாகிகள் பலரும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய வாசல் முன்பு காளைகளுடன் கூடினர். மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், தாங்கள் அழைத்து வந்திருந்த 2 காளைகளையும் ரயில் மூலம் தில்லிக்கு அனுப்புவதாகக் கூறி ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், போலீஸார் அவர்களை வாயில் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். திடீரென காளைகள் அவிழ்க்கப்பட்டதால் அவை, கூட்டத்தினரை விரட்டியபடி துள்ளி குதித்து ஓடின. இதனால்,ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை காளைகளை அழைத்து வந்து ரயிலில் தில்லிக்கு அனுப்ப நடந்த முயற்சியை  தடுத்து நிறுத்தும் போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com