இலங்கைத் தமிழர்-மீனவர்கள் பிரச்னைகள்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

இலங்கைத் தமிழர், தமிழக மீனவர் பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கோரிக்கைளை முன்வைத்தார்.

இலங்கைத் தமிழர், தமிழக மீனவர் பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கோரிக்கைளை முன்வைத்தார்.
சட்டப் பேரவையில் அவர் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் விவரம்:-
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் புரிந்தோர் மீது நடவடிக்கை எடுத்து உரிய நீதி வழங்க, மத்திய அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான முன் முயற்சிகளை உரிய சர்வதேச அமைப்புகள் மூலம் இந்திய அரசு எடுக்க வேண்டும்.
இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் நிலங்களை மீண்டும் வழங்கி, அவர்களின் பொருளாதார உரிமைகளை நிலைநாட்டி, சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் அவர்கள் வாழ சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புகிறேன்.
மீனவர் பிரச்னை: பாக் வளைகுடாவில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இலங்கைக் கடற்படையினர் பாக் வளைகுடாவில் தொடர்ந்து மீனவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் ஈடுபட்ட போதிலும், நமது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கான மீன்பிடித் தொழிலை அமைதியாகச் செய்து வருவதை உறுதி செய்ய, இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இலங்கையில் சிறைப்பட்டிருக்கும் மீதமுள்ள மீனவர்களையும், பிடித்து வைத்துள்ள மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டி, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக கச்சத்தீவுக்கான ஒப்பந்தங்களை திரும்பப் பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் கோரிக்கையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே முன்வைத்தார். இதற்கான மனுவையும் அளித்துள்ளார். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com