அவைக்கு ஒரு மரபு உண்டு; டிஜிபி, காவல் ஆணையர் எங்கே? துரைமுருகன் கேள்வி

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, காவல்துறை டிஜிபி, காவல்துறை ஆணையர் எங்கே என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அவைக்கு ஒரு மரபு உண்டு; டிஜிபி, காவல் ஆணையர் எங்கே? துரைமுருகன் கேள்வி


சென்னை: காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, காவல்துறை டிஜிபி, காவல்துறை ஆணையர் எங்கே என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேச எழுந்த துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் போது, காவல்துறை டிஜிபி,  காவல்துறை ஆணையர் இருக்க வேண்டும். அவர்கள் எங்கே? அவர்கள் வந்தால் தான் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுவேன். அவைக்கு என்று ஒரு மரபு உண்டு என்று கூறினார்.

தலைமை மற்றும் உள்துறை செயலாளர்கள் இருக்கிறார்கள் பேசுங்கள் என்று கூறிய முதல்வர் பழனிசாமி, என்னுடைய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துரைமுருகன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மானியக் கோரிக்கை விவாதத்தை பிரச்னையுடன் துரைமுருகன் தொடங்குவது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளின் மனு அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வகை செய்ய வேண்டும் என்றார் துரைமுருகன்.

காவல்துறையில் பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருப்பது குறித்தும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் குறிப்பிடும் வழக்குகள் புலன் விசாரணையில் இருப்பதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com