புதுவை ஆளுநரைத் திரும்பப் பெறும் வரை போராட்டம்: திமுக, இடதுசாரிகள், விசிக அறிவிப்பு

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப்படும் என திமுக, இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் ஆர்.சிவா எம்எல்ஏ.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் ஆர்.சிவா எம்எல்ஏ.

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப்படும் என திமுக, இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கை குறித்து திமுக, இடதுசாரிக் கட்சிகள், விசிக உள்ளிட்டவை சார்பில் புதன்கிழமை முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., விசிக முதன்மைச் செயலர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் கிரண் பேடி மேற்கொண்ட நடவடிக்கையால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்படவிடாமல், தன்னிச்சையாகச் செயல்பட்டு பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குக் கடந்த ஓராண்டாக ஆளுநர் கிரண் பேடி இடையூறு செய்து வருகிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது செயல்பாடு ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். ஆளுநரின் செயல்களுக்கு மத்திய பாஜக அரசு துணை போகிறது.
ஆளுநரின் இந்தச் செயலைக் கண்டித்தும், அவரை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுவையில் வருகிற 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. ஆளுநரைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com