அயராது உழைத்தால் விரும்பும் இடத்தை பெற முடியும்: இளையராஜா

மாணவர்கள் அயராது உழைத்தால் விரும்பும் இடத்தைக் கண்டிப்பாகப் பெற முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கட்டணமில்லா பொறியியல் கல்விக்கான ஆணையை பெற்ற பொறியியல் மாணவர்களுடன் இசையமைப்பாளர் இளையராஜா,திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி,

மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சாய்ராம் கல்விக்குழும நிறுவனர் லியோமுத்து நினைவேந்தல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 40 மாணவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் பெறாமல் இலவச பொறியியல் படிப்பு வழங்கும் ஆணையை வழங்கி அவர் மேலும் பேசியது:
மாணவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய சாதியுங்கள். சாதிக்க நினைப்பவர்கள் வெறும் கனவு கண்டு கொண்டு இருந்தால் மட்டும் போதாது. கனவு காண்பதை விட்டுவிட்டு நீங்கள் சாதிக்க விரும்பும் துறையில் முழு முயற்சியுடன் ஈடுபடுங்கள். அல்லும் பகலும் அயராது உழைத்தால் நீங்கள் விரும்பும் இடத்தைப் பெற முடியும் என்றார் அவர்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, முதன்மைச் செயல் அலுவலர் சாய் பிரகாஷ் லியோ முத்து, அறங்காவலர் ஷர்மிளா ராஜா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com