கதிராமங்கலம் பிரச்னை: குடந்தையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்திலிருந்து மத்திய அரசின் ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் உடனடியாக வெளியேறக் கோரி கும்பகோணத்தில்
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஆடுதுறையில் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டம்
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஆடுதுறையில் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்திலிருந்து மத்திய அரசின் ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் உடனடியாக வெளியேறக் கோரி கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடந்தை வர்த்தக சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, குடந்தை வழக்குரைஞர்கள் சங்கம், தமிழ்நாடு நெல்- அரிசி வியாபாரிகள் மற்றும் நவீன அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குடந்தை வர்த்தக சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளருமான கே.எஸ். சேகர் தலைமை வகித்தார்.
பேரவை மாநில துணைத் தலைவர் பெ. செல்வராஜ், நெல் அரிசி வியாபாரிகள்மற்றும் நவீன அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ப. குருநாதன், மோகன், பழனிசாமி, பாலகிருஷ்ணன், சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பேரவை மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் முருகேசன், குடந்தை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராஜசேகர், செயலாளர் செந்தில்ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக வெளியேற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக சங்கச் செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முன் மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். போராட்டம் நடத்திய மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் எவ்வித நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு பொருட்களையும் எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், அக்கல்லூரியின் தமிழ்த் துறை மாணவ, மாணவிகள் சுமார் 40 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com