சிறந்த ஆளுமை மிக்கவர் கோபாலகிருஷ்ண காந்தி : டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி. புகழாரம்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள்
சிறந்த ஆளுமை மிக்கவர் கோபாலகிருஷ்ண காந்தி : டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி. புகழாரம்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி சிறந்த ஆளுமை மிக்கவர் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.கே. எஸ். இளங்கோவன் புகழாரம் சூட்டினார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சோனியா காந்தியின் தலைமையில் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், அவர் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுவார். அவர் மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜிஆகியோரின் பேரன் ஆவார். ஆரம்பகாலத்தில் இந்தியாவின் இனங்கள், மொழிக் குழுக்கள் இணைந்து எத்தகைய வகையில் ஒன்றுபட்டு இருந்ததோ அதைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கரமாக அவர் இருப்பார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார் மதச்சார்பற்ற இந்தியாவின் தலைவராக விளங்க வேண்டும் என்று எதிர்பார்கிறோம்.
அதேபோல, மதச்சார்பற்ற இந்தியா, மனித உரிமைகள் கொண்ட இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக கோபால கிருஷ்ண காந்தி இருப்பார் என்பதற்காகவே அவர் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com