தங்கம் பவுன் ரூ.21 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது

ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.21 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.

ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.21 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகச் சந்தையில் தங்கத்தின் நிலவரம் ஆகியவை தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.21 குறைந்து, ரூ.2,623- க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை (ஜூலை- 8- ஆம் தேதி) முதல் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஜூலை 8- ஆம் தேதி முதல் தற்போது வரை , ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.65 வரையும், பவுனுக்கு ரூ. 580 வரையும் குறைந்துள்ளது. ஆனாலும், வெள்ளியின் விலை செவ்வாய்கிழமை உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.38. 60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 500 அதிகரித்து, ரூ.38,600 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
(ரூபாயில்- இத்துடன் ஜி.எஸ்.டி.
சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,623
1 பவுன் தங்கம் 20,984
1 கிராம் வெள்ளி 38.60
1 கிலோ வெள்ளி 38,600
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-
இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,644
1 பவுன் தங்கம் 21,152
1 கிராம் வெள்ளி 38.10
1 கிலோ வெள்ளி 38,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com