ராசிபுரம் அருகே ஜவ்வரிசி ஆலையில் தீ விபத்து

ராசிபுரம் அருகே நெ.3 கொமாரபாளையம் பகுதியில் செயல்படும் ஜவ்வரிசி உற்பத்தி சேகோ ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ

ராசிபுரம் அருகே நெ.3 கொமாரபாளையம் பகுதியில் செயல்படும் ஜவ்வரிசி உற்பத்தி சேகோ ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஜவ்வரிசி மூட்டைகள் எரிந்து வீணாயின.
நெ.3 கொமாரபாளையம் பகுதியில் ஜவ்வரிசி உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் சேகோ ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் 200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திடீரென ஆலையில் தீவிபத்து நிகழ்ந்தது. ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் உலையில் இருந்து வெளியேறிய தீப்பொறியினால் தீப்பரவி விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஜவ்வரிசி மூட்டைகள் எரிந்து வீணாயின. மேலும், மூட்டைகள் இருந்த மேற்கூரையும் தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்ததும் சேலம், ராசிபுரம் போன்ற பகுதிகளிலிருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு இதே ஆலையில் மின்கசிவால் தீவிபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com