ஸிகா உள்பட அனைத்து காய்ச்சல்களும் கண்காணிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஸிகா வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக அரசு கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஸிகா உள்பட அனைத்து காய்ச்சல்களும் கண்காணிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஸிகா வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக அரசு கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை திமுக, அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர். தளி தொகுதியில் ஸிகா வைரஸ் காய்ச்சல் குறித்து அந்தத் தொஹகுதி எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ், கேரள மாநில எல்லையோர தமிழக மாவட்டங்களில் பரவி வரும் காய்ச்சல்கள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த பதில்: பன்றிக்காய்ச்சல், ஸிகா வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக சுகாதாரத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தளி தொகுதி அஞ்சட்டியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அங்கு ஒருவருக்கு ஸிகா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
பிற காய்ச்சல்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் அவை உறுதி செய்யப்படவில்லை. ஸிகா காய்ச்சலுக்கான மாதிரிகள் புனேவில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் ஸிகா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்ததால் குணப்படுத்தப்பட்டுள்ளார்.
பரிசோதனைக் கருவிகள் தயார்: சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வுக் கூடத்திலும் காய்ச்சல் பரிசோதனைகளுக்கான கருவிகள் தயார் நிலையில் உள்ளன. ஸிகா காய்ச்சலால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. சுகாதாரத் துறையின் சார்பில் கூடுதல் இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரைக் கொண்டு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சித் துறை உள்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து பலதரப்பையும் இணைத்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே, ஸிகா வைரஸ் காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com