அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.எஸ்சி., வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட துணைவேந்தர் செ.மணியன். உடன் பதிவாளர் கே.ஆறுமுகம், சிண்டிகேட
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.எஸ்சி., வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட துணைவேந்தர் செ.மணியன். உடன் பதிவாளர் கே.ஆறுமுகம், சிண்டிகேட

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. வேளாண்மை (சுய நிதி), பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 8.5.2017 முதல் 31.5.2017 வரை பதிவு செய்யப்பட்டன.
பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கு 13,754 விண்ணப்பங்களும், பி.எஸ்சி., வேளாண்மை (சுயநிதி) படிப்புக்கு 2,082 விண்ணப்பங்களும், பி.எஸ்சி., தோட்டக்கலை படிப்புக்கு 1,102 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.
மேற்கண்ட படிப்புகளுக்கு "சமவாய்ப்பு' எண்கள் (தஹய்க்ர்ம் சன்ம்க்ஷங்ழ்) 7.7.2017 அன்று வழங்கப்பட்டன.
தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் தி.ராம்குமார் வரவேற்றார். பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்டார். மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளமான www.annamalaiuniversity.
ac.in-ல் தங்களது தரவரிசையை (Rank) தெரிந்து கொள்ளலாம்.
பி.இ. படிப்புக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு: மேலும், பி.இ. படிப்புக்கான "சமவாய்ப்பு' எண்களை பல்கலைக்கழகப் பதிவாளர் க. ஆறுமுகம், இளநிலை மீன்வள (பிஎஃப்எஸ்சி) படிப்புக்கான "சமவாய்ப்பு' எண்களைத் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், இளநிலை தொழில்முறை சிகிச்சை (பிஒடி) படிப்புக்கான "சமவாய்ப்பு' எண்களை வேளாண்புல முதல்வர் வி.ரவிச்சந்திரன், இளநிலை இயற்பியல் சிகிச்சை (பிபிடி) படிப்புக்கான "சமவாய்ப்பு' எண்களை கல்வியியல் புல முதல்வர் ஆர்.பாபு ஆகியோர் வெளியிட்டனர்.
கலந்தாய்வு அட்டவணை, கலந்தாய்வுக்கான அனுமதிக் கடிதத்தைத் தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம். தனியாக கலந்தாய்வுக் கடிதம் அனுப்பப்படமாட்டாது.
நிகழ்ச்சியில் தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எம்.அருள் மற்றும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் டி.ராம்குமார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com