பிரச்னைக்குரிய கிணறை கிராமத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார்: ஓ. பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பிரச்னைக்குரிய கிணறை கிராமத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
பிரச்னைக்குரிய கிணறை கிராமத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார்: ஓ. பன்னீர்செல்வம்


சென்னை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பிரச்னைக்குரிய கிணறை கிராமத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னதாக கிணறு மற்றும் நிலத்தை கிராமத்தினருக்கு விற்பனை செய்யத் தயார் என்று பன்னீர்செல்வம் கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள மிகப்பெரிய கிணறையும் அதனை சுற்றியுள்ள நிலத்தையும், கிராமத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார் என்று கூறியுள்ளார். 

சம்பவத்தின் பின்னணி: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம், கோம்பை மலைக்கரடு அடிவாரத்தில் வரட்டாறு ஓடை தடுப்பணை அருகே ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்குச் சொந்தமான பாசனக் கிணறு உள்ளது. இந்தக் கிணறை ஆழப்படுத்துவதாலும், கிணற்றுக்குள் பக்கவாட்டில் ஆழ்துளையிட்டு தண்ணீர் சேகரிப்பதாலும், இதே பகுதியில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீர் திட்ட கிணறு மற்றும் ஏனைய பாசனக் கிணறுகளில் நீர்சுரப்பு குறைந்துவிட்டதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கிராம பிரதிநிதிகள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணறில் இருந்து அடுத்த 3 மாதத்துக்கு கிராமத்தினர் தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

மேலும், கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள நிலத்தை கிராமத்தினருக்கு விற்பனை செய்யும் பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com