மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேர் நியமனம்

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்ளின் உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேர் நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்ளின் உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வெளியிட்டுள்ளச் செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு , உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான தேர்வுக்குழுக் கூட்டம், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் தலைமையில் கடந்த மே 2 ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேர்வுக்குழு உறுப்பினர்களான கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் பிரதாப் யாதவ், சட்ட செயலர் (பொறுப்பு) எஸ்.எஸ்.பூவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் காலியாக உள்ள 28 உறுப்பினர் பதவிகளுக்கு, 6 ஆண்கள் , 6 பெண்கள் உள்பட 12 தகுதியானவர்களின் பெயர்களைத் தேர்வுக்குழு அரசுக்குப் பரிந்துரை செய்தது. தேர்வுக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கான நியமன அரசாணையை தமிழக அரசு கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியிட்டது.
இந்த அரசாணையின்படி 11 மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர்களுக்கான நியமனத்தை திங்கள்கிழமை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் வழங்கினார். மேலும் எஞ்சியுள்ள 17 மாவட்ட உறுப்பினர்களின் காலியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அறிவிக்கை நகல் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குறைதீர் மன்ற உறுப்பினர்களாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள்:
1- டி.வினோத்குமார் - சேலம்
2- எஸ்.சிவன்மூர்த்தி - ஸ்ரீ வில்லிபுத்தூர்
3- பி.எஸ்.செல்வநாதன் - கரூர்
4- எஸ்.பாலசுப்பிரமணியன் - தஞ்சாவூர்
5- டி.வி.பாபு - கடலூர்
6- ஏ.ஜவகர் - ராமநாதபுரம்
7- எஸ். சரஸ்வதி - நீலகிரி
8- கே.ஜெயலட்சுமி - சிவகங்கை
9- ஆர்.அமுதமொழி - விழுப்புரம்
10- என்.சுதா - புதுக்கோட்டை
11- எம்.முத்துலட்சுமி - திண்டுக்கல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com