விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக்: தமிழக அரசு பெருமிதம்!

விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக் என அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக்: தமிழக அரசு பெருமிதம்!

சென்னை: விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக் என அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கான டாஸ்மாக் நிறுவன ஆண்டறிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:

டாஸ்மாக் நிறுவனம் 2015-16 ஆம் ஆண்டில் ரூ.125.64 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. அதே நேரம் 2014-15 ஆம் ஆண்டில் ரூ.79.13 கோடி லாபம் கிடைத்துள்ளது.

2014-15 ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ 27,820 கோடியாக இருந்தது. 2015-16 ஆண்டில் அந்த வருவாயானது ரூ.30,283 கோடியாக உயர்ந்துள்ளது.

2015-16 ஆண்டில் ரூ. 26,992 கோடி அளவுக்கு மது வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது    

விற்பனை மற்றும் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னணியில் உள்ள நிறுவனமாக டாஸ்மாக் திகழ்கிறது.

இவ்வாறு அந்த ஆண்டறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com