கமலை இயக்குவது திமுகவா?: மு.க.ஸ்டாலின் பதில்

நடிகர் கமல்ஹாசனை இயக்குவது திமுகவா என்பது குறித்து அக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
கமலை இயக்குவது திமுகவா?: மு.க.ஸ்டாலின் பதில்

நடிகர் கமல்ஹாசனை இயக்குவது திமுகவா என்பது குறித்து அக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: நீட் தேர்வுக்கு விலக்களிக்க மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர்கள் வென்று வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. மத்திய அரசுக்கு அடிபணிந்தால் அது வேதனை. சட்டப்படி உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது முறைதானா ஆட்சியில் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சி இருக்கிறது. தற்போதைய அரசுக்கு கமல்ஹாசன் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்றார்.
நடிகர் கமல்ஹாசனை இயக்குவது திமுகதான் என்று அமைச்சர்கள் கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எங்களை இயக்குவது கருணாநிதிதான் என ஸ்டாலின் பதில் அளித்தார்.
முதல்வருக்குக் கோரிக்கை: மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடர், திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புணேக்கு மாற்றப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் போட்டி கடந்த 1997-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது.
ஏ.டி.பி. டென்னிஸ் ஓபன் போட்டியைத் தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com