கமல்ஹாசனை இயக்குவது யார்..?: கனிமொழி பரபரப்பு பேட்டி

கமல்ஹாசனுக்கு திமுக உதவி செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை எனவும் அவர்
கமல்ஹாசனை இயக்குவது யார்..?: கனிமொழி பரபரப்பு பேட்டி


'கமல்ஹாசனுக்கு திமுக உதவி செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை எனவும் அவர் சுயமாக செயல்படக்கூடியவர்' என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து கூறியுள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாகக் கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. கமலின் கருத்தை அதிமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு கமலுக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார்.

இதனிடையே ஹிந்தி திணிப்பிற்கு எதிராக எப்போது குரல் கொடுத்தேனோ அப்போதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக கமல் கூறியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தைரியம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும். கமலஹாசனுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

திமுக மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசு முற்றிலும் முடங்கி கிடக்கிறது. எம்பிபிஎஸ் கலந்தாய்வு முடிந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கலந்தாய்வு நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டும் எல்லாமே எதிர்மாறாகவே நடக்கிறது. தமிழக மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

நீட் தேர்வு  பிர்ச்னையில் தமிழக அமைச்சர்கள், இப்போது பிரதமரை சென்று பார்த்து இருக்கிறார்கள். இவர்கள் இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டுள்ளார்களா? அல்லது ‘நீட்’ தேர்வே தமிழகத்துக்கு தேவை இல்லை என்று கேட்டு உள்ளார்களா? என்ற தெளிவான விவரங்கள் வெளியாவில்லை.  எல்லாம் ஏமாற்று வேலையாக இருக்கிறது'' என்றார்.

கமல்ஹாசனை திமுக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, யாருடைய தயவையும் நம்பி திமுக இல்லை. இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள்; செயல் தலைவர் இருக்கிறார். கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாரும் தேவை இல்லை.

நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி, இயங்கக் கூடியவர் அல்ல. யாரையும் இயக்கி அதன் மூலம் ஆதாயம் அடைய வேண்டிய நிலை திமுகவுக்கு இல்லை. கமல்ஹாசனுக்கு திமுக உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவர் சுயமாக செயல்படக்கூடியவர். கமல்ஹாசன் அவருடைய கருத்துக்களை சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை என்று கனிமொழி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com