நெடுவாசலில் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி பொதுமக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சனிக்கிழமை அப்பகுதி மக்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசலில் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டோர்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, ஏப்.12-ம் தேதி மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். 102-வது நாளாக சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில், அத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, நெடுவாசலில் திட்டத்தைச் செயல்படுத்தினால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பாக்கெட்டுகள், கேன்களில் உள்ள நீரை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர். அதனால், ஹெட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தி சுத்தமாக உள்ள நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட வேண்டாம் என்பதை அரசுக்கு உணர்த்தும்விதமாக, தண்ணீர் பாக்கெட்டுகள், கேன்களை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com