மெரினா கடற்கரையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் பைப் லைன்களில் சில நாள்கள் முன்னர் தீடீரென கசிவு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் கதீராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற கல்லூரி மாணவியை போலீஸார் ஜூலை 12-ம் தேதி கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஜூலை 17-ம் தேதி அவரை குண்டர் சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்தது. இது மக்களின் மத்தியில் கோவத்தை அதிகரித்தது. இந்நிலையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது, இதையடுத்து மெரினா கடற்கரையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com