நீட்: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல்

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தினார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், மூத்த தலைவர் தா.பாண்டியன்

ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும், நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை
செய்யவேண்டும், விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவிலான மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தை கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய தா.பாண்டியன், 'நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
இந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com