நடிகர் சங்க கட்டடப் பணிகள் இன்று துவக்கம்: விஷால்

நடிகர் சங்க புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கான இடைக்காலத் தடை நீங்கியதை அடுத்து, நடிகர் சங்க கட்டடப் பணிகள் புதன்கிழமை (ஜூலை 26) தொடங்கும் என சங்கச் செயலாளர் நடிகர் விஷால்
நடிகர் சங்க கட்டடப் பணிகள் இன்று துவக்கம்: விஷால்

நடிகர் சங்க புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கான இடைக்காலத் தடை நீங்கியதை அடுத்து, நடிகர் சங்க கட்டடப் பணிகள் புதன்கிழமை (ஜூலை 26) தொடங்கும் என சங்கச் செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நடிகர் சங்கம் மீது என்ன குறை சொல்லலாம் என்று நினைப்பவர்கள் தேவையில்லாமல் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். நாங்கள் திறந்த புத்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் முடித்து திறக்க உள்ளோம். முதற்கட்டப் பணிகள் புதன்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டப்படி கட்டடம் கட்டப்படும். நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது என்றார் விஷால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com