அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உணவில் மோசடி?

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பெயரளவுக்கு உணவு விநியோகம் செய்து பொருள்கள் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு
உணவைப் பெற முண்டியடிக்கும் நோயாளிகள். (உள்படம்) நோயாளிக்கு விநியோகிக்கப்பட்ட குறைந்த அளவிலான உணவு.
உணவைப் பெற முண்டியடிக்கும் நோயாளிகள். (உள்படம்) நோயாளிக்கு விநியோகிக்கப்பட்ட குறைந்த அளவிலான உணவு.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பெயரளவுக்கு உணவு விநியோகம் செய்து பொருள்கள் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
750 படுக்கை வசதிகள் கொண்ட அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சுமார் 1,000 பேரும், வெளிநோயாளிகள் நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்டோரும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். வேலூர் மட்டுமல்லாது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு நோய் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் உணவுக்கு சிரமப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மூன்று வேளைகளும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. காலை வேளையில் இரண்டு இட்லியும், பிற்பகல், மாலை வேளைகளுக்கு 50 கிராம் அளவில் சாதம், சாம்பார், கீரை, பழம், மோர் வழங்கப்படுகிறது. சாம்பார் அதிகளவில் தண்ணீர் கலந்தும், கீரை வேக வைக்காமலும் உண்பதற்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக கொடுக்கப்படும் இந்த உணவு 5 வயதுள்ள குழந்தையின் பசியை போக்குவதற்கே போதுமானதாக இல்லாத நிலையில், பெரியவர்களுக்கு வழங்கப்படும் குறைவான உணவையும் விநியோகிக்கும் போது வாங்கா விட்டால் தீர்ந்து விட்டதாக ஊழியர்கள் கூறுவதாகத் தெரிகிறது. இதனால் பெரும்பாலான நோயாளிகளின் உடன் இருப்போர், உணவு விநியோகிக்கும் இடங்களில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
தரமான முறையில் சமைத்து நோயாளிகளுக்கு விநியோகிக்க வழங்கப்படும் பொருள்களில் பெரும்பாலானவை கபளீகரம் செய்வது குறித்து நோயாளிகள் தரப்பில் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டும் கண்டுகொள்ளப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கூறியதாவது:
மருத்துவமனை நிர்வாகத்தால் பெயரளவுக்கு விநியோகிக்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதோடு, ஒரேயொரு கரண்டி சாதம் கொடுக்கப்படுகிறது. போதுமானதாக இல்லாத அளவுக்கு விநியோகிக்கப்படும் உணவை வறுமை காரணமாக வேறு வழியின்றி வாங்கி சாப்பிட வேண்டியிருக்கிறது.
பாதி வயிறு நிரம்பும் வகையிலாவது உணவு கொடுக்க வேண்டும் என சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரையில் நடவடிக்கை இல்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com