ராமேசுவரம் - ஃபைசாபாத் இடையே அயோத்தி விரைவு ரயில்: பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்

ராமேசுவரம்- ஃபைசாபாத்-ராமேசுவரம் இடையிலான அயோத்தி வாராந்திர விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 27) கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.
ராமேசுவரம் - ஃபைசாபாத் இடையே அயோத்தி விரைவு ரயில்: பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்

ராமேசுவரம்- ஃபைசாபாத்-ராமேசுவரம் இடையிலான அயோத்தி வாராந்திர விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 27) கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், அயோத்தி வாராந்திர விரைவு ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, தொடக்க நாள் சிறப்பு ரயில் முதல்முறையாக ராமேசுவரத்தில் இருந்து ஃபைசாபாத்துக்கு இயக்கப்படும்.
ரயில் எண் 06793: ஜூலை 27 (வியாழக்கிழமை) ராமேசுவரத்தில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு ஜூலை 28 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.20 மணிக்கு வந்தடையும். பின்பு, எழும்பூரில் இருந்து புறப்பட்டு ஜூலை 29 (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு ஃபைசாபாத் சென்றடையும்.
இந்த ரயில் மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கல், பால்ஹர்ஷா, நாக்பூர், இதார்சி, ஜபல்பூர், சாத்னா, அலாகாபாத், ஜான்பூர், அயோத்தியா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஆகஸ்ட் 6 -ஆம் தேதி முதல் வாராந்திர அயோத்தி ரயில் சேவை
ரயில் எண் 16793: ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு புதன்கிழமை காலை 8.30 மணிக்கு பைஃசாபாத் சென்றடையும்.
ரயில் எண் 16794: ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு ஃபைசாபாத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு ராமேசுவரம் வந்தடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com