என்,எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 26 நாள் பணி நாட்கள் வழங்ககோரி நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்,எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்

நெய்வேலி: என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 26 நாள் பணி நாட்கள் வழங்ககோரி நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1-A பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மாதாந்திர பணி நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி நிர்வாகம் குறைத்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநாட்கள் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை 12-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அன்மையில், என்.எல்.சி நிர்வாகம் நெய்வேலி தொழிலக பகுதி, தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறுவதற்குத் தடை உத்தரவு பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் தொழிலாளர் துணை ஆணையர் கனேஷன் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே எ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயலர் எம்.சேகர் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது மாவட்ட பொதுச்செயலர் எம்.சேகர் கூறுகையில்,
தொழிலாளர்களுக்கு 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கட்கிழமை வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com