குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: ராமதாஸ்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: ராமதாஸ்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி பொது விநியோகத் திட்டப் பயனாளிகளை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமையில்லாத பிரிவினர் என வகைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதன்படி கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
அதன்படி, குடும்பத்தில் யாராவது வருமான வரி செலுத்தினாலோ, வீட்டில் ஏ.சி. அல்லது கார் வைத்திருந்தாலோ அவர்கள் முன்னுரிமையற்ற பிரிவினராக வகைப்படுத்தப்படுவர். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் வரி கட்டுவோர், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்போர் ஆகியோரும் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர்.
மத்திய அரசிடம் கணக்குக் காட்டப்படுவதற்காக மட்டுமே இந்த வகைப்படுத்தல் நடைபெறுவதாகவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் உணவு தானியம் வழங்கும் தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அதன் உணவு மானியத்தை படிப்படியாக குறைத்து வருகிறது. அதேபோல், மாநிலங்களும் உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறது. தமிழக அரசின் நிதிநிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில் பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் தொடரும் என அரசு கூறுவது வெற்று சமாதானமாகவே இருக்கும்.
பொது விநியோகத் திட்டத்தின்படி பயனடைய, ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்; 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் மிகவும் கடுமையானவை.
இவை பின்பற்றப்பட்டால் தமிழகத்தில் தகுதியுடைய பலருக்கு பயன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com