தமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் காமராஜ்

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திங்கள்கிழமை விளக்கமளித்தார்.
தமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் காமராஜ்

தமிழக அரசிதழில் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் இருந்து ரேஷன் கிடையாது என்று அரசாணை வெளியானது. இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்கப்படடு வருகிறது. இங்கு இந்தத் திட்டம் மிகவும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் உணவு பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 

தேசிய உணவு பாதுகாப்பு திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்த உணவு பாதுகாப்பு திட்டமும் செயல்படுகிறது. இந்த உணவு பாதுகாப்பு திட்டத்தை கடைசியாக மேம்படுத்திய மாநிலம் தமிழகம் தான். 

பழைய விலையின் அடிப்படையிலேயே ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் நடைமுறைகள் தமிழகத்துக்கு பொருந்தாது.

தமிழக அரசு வழங்கிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் ஏற்படுத்திய திட்டத்தின் அடிப்படையில் கூடுதல் பாதுகாப்புடனே வழங்கப்பட்டு வருகிறது. 

இவை அனைத்தும் மாநில அரசின் நிதியில் இருந்துதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொது விநியோகத் திட்டத்தின் அம்சங்கள். எனவே அதற்கும் தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

எனவே தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவீனங்கள் ஏற்படும்
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com