வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்

நாடு முழுவதும் 2016}17}ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய திங்கள்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும்.

நாடு முழுவதும் 2016}17}ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய திங்கள்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும்.
வருமான வரிக் கணக்கை இணையதளம் மூலமாக தாக்கல் செய்யலாம். எனினும், ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ள வரி செலுத்துவோர், வருமான வரித்துறையிடம் இருந்து பிடிக்கப்பட்ட வரியைத் திரும்பப் பெற வேண்டிய தேவை இல்லாதவர்கள் படிவங்கள் மூலம் கணக்குத் தாக்கல் செய்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இதற்கிடையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். கட்டடம் ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரி சேவை மையம், தாம்பரத்தில் உள்ள வருமான வரி சேவை மையம் ஆகியவற்றில் வருமான வரி படிவம் தாக்கல் செய்ய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.
மூத்த குடி மக்கள் காலை முதலே வருகை தந்தனர். அவர்களுக்கு வருமான வரி படிவம் தாக்கல் செய்வதற்கு தேவையான உதவிகளை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து கொடுத்தனர்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், சலுகை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி கூறியது: வருமான வரி கணக்கை ஜூலை 31}ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால், தேவையான சலுகை பெற முடியும். இல்லை எனில், சலுகை கிடைக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com