மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது

மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது

மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பூருக்கு வியாழக்கிழமை வருகை தந்த முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் வெற்றி பெற முடியாது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். அதற்காகவே, தேர்தலை ஒத்திவைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் உரிமைகள் தொடர்பான எந்தப் பிரச்னைகளிலும் அதிமுக அரசு தலையிடத் தயாராக இல்லை. அவர்களுக்கு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனம் உள்ளது.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு மெல்ல மெல்ல பறித்து வருகிறது. அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. மாடு வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஒரு பகுதியாகும். வயதான மாட்டால் விவசாயிக்கு எந்தப் பயனும் இல்லை. இறைச்சிக்காக மாடு வெட்டக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு ஜனநாயக விரோதச் செயலாகும். அமராவதி ஆற்றில் இருந்து 18 கிராமங்களுக்குத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, அமராவதி ஆற்றில் நடைபெறும் தண்ணீர்த் திருட்டை தடுக்க வேண்டும். குடிநீர், வறட்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் (ஜூன் 2,3) தேதிகளில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஜூன் 7, 8 தேதிகளில் கோவையில் மாநில பொதுக் குழு நடைபெறுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com