இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஜி சாட்-19 செயற்கைக்கோள்

ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) தொடங்கியது.
இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஜி சாட்-19 செயற்கைக்கோள்

ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) தொடங்கியது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 5) மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்துடன் ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட்டை இஸ்ரோ முதல்முறையாக தயாரித்துள்ளது. இது இஸ்ரோ தயாரித்துள்ள ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது. அதாவது 640 டன் எடையுள்ளது.
இந்த ராக்கெட் மூலம் திங்கள்கிழமை (ஜூன் 5) மாலை 5.28 மணிக்கு 3,136 கிலோ எடை கொண்ட ஜி சாட் -19 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் மூன்று பாகங்களாகப் பிரிந்து செயற்கைக்கோளை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும்.
25 மணி நேர கவுன்ட் டவுன்: செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) பிற்பகல் 3.58 மணிக்கு தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com