எடப்பாடி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் எண்ணம் இல்லை: டி.டி.வி.தினகரன் விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார்.
எடப்பாடி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் எண்ணம் இல்லை: டி.டி.வி.தினகரன் விளக்கம்!

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் எடப்பாடி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், நேற்று முன்தினம் தில்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியானர்.

இன்று அவர் பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்றுள்ளார். வழியில் கிருஷ்ணகிரியில் அவருக்கு அதிமுகாகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால் நான் விலகியிருக்க வேண்டுமென்று அமைச்சர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். கட்சிதான் முக்கியம் என்று அதனை ஏற்று நானும் விலகி இருந்தேன். ஆனால் தற்பொழுது 45 நாட்கள் கடந்த நிலையில் இணைப்பிற்கான எந்த முயற்சிகளும் நடக்கவில்லை.

அத்துடன் ஒரு குற்றசாட்டின் பேரால் நான் திகார் சிறையில் இருக்க நேர்ந்தது.இந்த காலகட்டத்தில்  கட்சி  வலிமையுடன் செயல்படவில்லை என்று தமிழகம் முழுவதும் இருந்து என்னை சந்தித்த தொண்டர்கள் தெரிவித்தனர். எனவே கட்சியினை வலிமையாக்க தொடர்ந்து செயல்படுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

எனவே அதற்கு தேவையான தகுந்த உத்தரவுகளை பெற நான் தற்பொழுது பெங்களூரு சென்று பொதுச் செயலாளரை சந்நிதிக்க உள்ளேன்.

எனது செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் சிலர் எதோ ஒரு கட்டாயத்தின் பேரில் அல்லது பயத்தின் காரணமாக செயல்படலாம். அது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.

பொதுச் செயலாளர் சசிகலாவை எம்.எல்.ஏக்கள் சிலர் சென்று சந்தித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சியில் சசிகலா அணி என்று எதுவும் தனியாக இல்லை. கட்சியின் ஒற்றுமையே முக்கியம்.

தமிழக முதல்வர் எடப்பாடி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் வகையில் நான் செயல்பட மாட்டேன்.அது எடப்பாடி அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com