மணப்பட்டில் ரூ.350 கோடியில் கடல்சார் காட்சியகம்: புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தகவல்

புதுச்சேரி அருகேயுள்ள மணப்பட்டில் ரூ.350 கோடியில் கடல்சார் காட்சியகம் அமைக்கப்படும் என அந்த மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள மணப்பட்டில் ரூ.350 கோடியில் கடல்சார் காட்சியகம் அமைக்கப்படும் என அந்த மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
பொது விநியோகத் திட்டத்தில் பொருள்கள் வேண்டாம் என்ற திட்டத்தில், அரசின் இலவசங்கள் வேண்டாம் எனக் கூறுவோருக்கு சிறப்பு பச்சை நிற குடும்ப அட்டை தரப்படும். குடும்ப வருவாயை கணக்கில் கொண்டு சிவப்பு நிற அட்டைகள் மறு வகைப்படுத்தப்படும்.
ஆதார் அடிப்படையில் பொருள்கள் வழங்க ஸ்வைப் இயந்திரங்கள், டேப்லட் வாங்கப்படும்.
புதுவையில் மூன்று இயற்கை உணவகங்கள் தொடங்கப்படும். ஊரகப் பகுதிகளில் 2 இடங்களில் பால் குளிரூட்டும் நிலையங்கள் நிறுவப்படும்.
கட்டுமானப் பணிகளில் செலவைக் குறைக்கும் வகையில் ஃபிளை ஆஷ் (எரி சாம்பல்) புதுவை கூட்டுறவு கட்டட மையம் மூலம் தயாரித்துத் தரப்படும்.
அமுதசுரபி சார்பில், சாரம் பகுதியில் ஜெனரிக் மருந்துக் கடை திறக்கப்படும்.
கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 40 இளநிலை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோயில்களை புனரமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.
ராஜீவ் காந்தி கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆதிதிராவிட மக்களுக்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரம் நிவாரணம் தரப்படும்.
புதுவை, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் பட்டியல் இனத்தவருக்கு பட்டா வழங்கி கல்வீடு கட்டும் திட்டத்தில் மானியம் வழங்கப்படும்.
புதிதாக 10,000 பேருக்கு முதியோர், விதவை உதவித்தொகை தரப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். புதிதாக 700 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் தரப்படும்.
புதுவையில் காற்றின் தரம் அறியும் கருவி நிறுவப்படும். லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் ரூ.ஒரு கோடியில் புதுமை படைக்கும் மையம் ஏற்படுத்தப்படும்.
புதுவை அருகேயுள்ள மணப்பட்டில் ரூ.350 கோடி செலவில் கடல்சார் காட்சியகம் அமைக்கப்படும்.
குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புக்கு தனிப் பள்ளி தொடங்கப்படும். காரைக்கால் துறைமுகத்தில் இயற்கை எரிவாயுவைக் கையாளும் முனையம் ஏற்படுத்தப்படும்.
பல் மருத்துவம் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அம்பேத்கர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.1.75 லட்சமாக உயர்த்தப்படும்.
பாட்கோ, பிசிஎம் கழக முறைகேடுகள் குறித்த விசாரணை பாட்கோ, பிசிஎம் கழகங்களில் 5 ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
கட்டுமானப் பணிகளுக்கு எம்சேன்ட் தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com