தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்!

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்!

சென்னை: எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலி னின் எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமல் செய்யப்பட உள்ளது. அதற்கு ஏதுவாக பல்வேறு மாநில சட்டசபைகளிலும் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஜி.எஸ்.டி மசோதா எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டால் அது வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். எனவே இதனை நிறைவேற்றுவதற்கு  முன்னதாக வணிகர்கள்  மற்றும் தொழில் அதிபர்கக்ளுடன் அரசு ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.

எனவே தற்பொழுது இந்த மசோதாவை நிறைவேற்றாமல் சட்டப்பேரவை பொறுப்புக் குழுவுக்கு அனுப்பி, அனைத்து தரப்பினருடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னர் நிறைவேற்றலாம் என்று தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பினை பொருட்படுத்தாமல் ஜி.எஸ்.டி மசோதாவானது குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  

இதனைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com