நதிகள் இணைப்புக்கு ரஜினிகாந்த் ரூ.1 கோடி தரத் தயார்: அய்யாக்கண்ணு

நதிகள் இணைப்புக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்கத் தயாராக இருக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு
நடிகர் ரஜினிகாந்துக்கு பொன்னாடை போர்த்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.
நடிகர் ரஜினிகாந்துக்கு பொன்னாடை போர்த்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.

நதிகள் இணைப்புக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்கத் தயாராக இருக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் விவசாயிகளின் நிலை குறித்து அய்யாக்கண்ணு எடுத்துக் கூறினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியது: நதிகள் இணைப்புக்காக ரூ.1 கோடி வழங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் 10 ஆண்டுகளுக்கு முன் கூறியிருந்தார். கடுமையான வறட்சி, பருவமழை பாதிப்புகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கூறினேன். ஏற்கெனவே அறிவித்தபடி நதிகள் இணைப்புக்காக ரூ.1 கோடியை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கத் தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறினார்.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு மற்றும் காவிரியை இணைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார். தில்லியில் நடந்த அகில இந்திய போராட்டக்குழு விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் 26-ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மீண்டும் தில்லியில் போராட்டம் நடத்தப்போகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com