31 செயற்கைக்கோளுடன் ஜூன் 23-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி38 ராக்கெட்

ஆந்திர மாநிலம் சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட் வரும் ஜூன் 23-ஆம் தேதி விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட்டில் பொருத்தப்படும் கார்ட்டோ சாட் வகை செயற்கைக் கோள்கள்.
பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட்டில் பொருத்தப்படும் கார்ட்டோ சாட் வகை செயற்கைக் கோள்கள்.

ஆந்திர மாநிலம் சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட் வரும் ஜூன் 23-ஆம் தேதி விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த ராக்கெட் முதலாம் ஏவுதளத்தில் இருந்து அன்றைய தினம் காலை 9.29 மணிக்கு செலுத்தப்படவுள்ளது. பிஎஸ்எல்வி சி 38 ரக ராக்கெட் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக்கோள்களையும், இந்தியாவின் சார்பில் கார்டோசாட் 2 செயற்கைக்கோளை சுமந்து செல்லவுள்ளது.
கார்டோசாட்: பூமியைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் தொலையுணர்வு வசதிகளை மேம்படுத்தவும் கார்டோசாட் வகை செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே கார்டோசாட்-2சி, கார்டோசாட்-2டி செயற்கைகோள்களை இஸ்ரோ அமைப்பு விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது. இப்போது அந்த வரிசையில் கார்டோசாட் 2இ செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்புகிறது. கார்டோசாட் 2இ செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்க நவீன கேமராக்கள், தொலையுணர் கருவிகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.
நானோ செயற்கைக்கோள்கள்: பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட்டுடன் 14 நாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. இவை ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பிஃன்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாத்வியா, லிதுவானியா, ஸ்லோவாகியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சார்பில் ஒரு நானோ செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்தச் செயற்கைக்கோள்களின் மொத்த எடை 955 கிலோ.
40 ஆவது ராக்கெட்: விண்ணில் செலுத்தி வெற்றி பெற்ற வரிசையில் பிஎஸ்எல்வி சி 38 வரிசை ராக்கெட் இஸ்ரோவின் 40-ஆவது ராக்கெட்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com