இறுதிக்கட்ட இடிப்புப் பணியில் சென்னை சில்க்ஸ் கட்டடம்

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிப்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிப்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்த விவரம்: தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் 19 நாள்களில் 90 சதவீதம் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 10 சதவீத கட்டடத்தின் பின்புறத்தில், 19-ஆவது நாளாக திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்காக, கட்டடத்தின் பின்புறத்தின் இடது புறதில் மணல் மேடு உயர்த்தப்பட்டது. பின்பு, ஜாக் கட்டர் இயந்திரம் முகப்புப் பகுதிக்கு அருகே கொண்டு சென்று இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது, ஏற்கனவே 7-ஆவது மாடியிலிருந்து சரிந்தநிலையில் தொங்கிக்கொண்டிருந்த மேற்கூரைப் பகுதிகள் அகற்றப்பட்டன. மேலும், படிப்படியாக முகப்புப் பகுதியின் கான்கிரீட் தூண்கள் நொறுக்கப்பட்டு, கட்டடம் இடிக்கப்பட்டது.
5 சதவீதம் மட்டுமே...: ஆனால், இதரப் பகுதியை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கட்டடத்தின் முகப்புப் பகுதியின் பின்புறத்தில், அதிகளவு கட்டுமான இரும்புக் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனை அப்புறப்படுத்திய பிறகு, செவ்வாய்க்கிழமை மேலும் மணல் மேடு அமைக்கப்படவுள்ளது. அதன் பிறகே, ஜாக் கட்டர் உதவியுடன் மீதமுள்ள 5 சதவீத கட்டடமும் இடித்து முடிக்கப்படும். எனவே, திட்டமிட்டபடி புதன்கிழமைக்குள் (ஜூன் 21) முழுமையாக சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படும் என இடிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com