தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழக்ததில் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.
தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழக்ததில் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோடைகாலம் தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதிலும், கத்திரி வெயில் காலத்தில் தினமும் 100 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டனர். கத்திரி வெயில் நிறைவடைந்த பிறகு, தென்மேற்குப் பருவ மழை தொடங்கி, சில மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனாலும் சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது.

எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், வளசரவாக்கம், கே.கே.நகர், அம்பத்தூர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழையும் கொட்டியது.

இம்மழையால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து, குளிர்ச்சி பரவியது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை தவிர, புறநகரிலும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், தெற்கு ஆந்திர கடற்கரை முதல் குமரிக்கடல் வரை பரவியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது.

சென்னையில் சில இடங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com