திருச்சி விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மதுரையை சேர்ந்தவர் கைது

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 3 கோடி மதிப்புடைய 5 கிலோ போதைப் பொருளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 கிலோ ஆம்பிட்டமைன் என்ற போதைப் பொருள்.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 கிலோ ஆம்பிட்டமைன் என்ற போதைப் பொருள்.

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 3 கோடி மதிப்புடைய 5 கிலோ போதைப் பொருளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மலேசியா செல்லும் மலிண்டோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த ரெ. கோவிந்தமூர்த்தி என்ற பயணியின் உடைமைகளுக்குள் 5 கிலோ எடையுள்ள மாவுப்பொட்டலங்கள் இருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது உணவுக்கான மாவு வகைகள் என தெரிவித்தார்.
சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் அவற்றை பரிசோதித்தபோது அது, ஆம்பிட்டமைன்ஸ் என்ற போதைப் பொருள் எனத் தெரியவந்தது. இது பிரவுன் சுகர் மற்றும் ஒயிட் சுகர் போன்ற போதைப் பொருள்களைவிட அபாயகரமானது என்றும், அவைகளைவிட பலமடங்கு விலை அதிகம் என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ ஆம்பிட்டமைன்ஸ் போதைப் பொருள் பவுடரின் விலை சர்வதேச சந்தையில் ரூ. 3 கோடி எனக் கூறப்படுகின்றது. இதுதொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த கோவிந்தமூர்த்தியை கைது செய்து போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com