'பெண்களால்தான் சமுதாயத்தில் மாற்றதைக் கொண்டுவர முடியும்'

பெண்களால்தான் சமுதாயத்தில் மாற்றதைக் கொண்டு வர முடியும் என்று நோபால் பரிசு பெற்ற ஏமன் நாட்டு பெண் தலைவர் தவக்கோல் கர்மன் கூறினார்.
சென்னை சத்யாபாமா பல்கலைக்கழகத்தில் 'பெண்கள் முன்னேற்றம்' குறித்த புரிந்துணர்வு ஓப்பந்தத்துடன் பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், ஏமன் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற தவக்கோல் கர்மன்.

சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் தவக்கோல் கர்மன் பேசியது:
பெண்கள் முன்னேற்றதுக்கு அனைவரும் பாடுபட வேண்டும். சர்வாதிகாரத்தை எதிர்த்து பெண்கள் தைரியமாகப் போராட வேண்டும். பெண்கள் குடும்பத்தைத் தாண்டி வெளி உலகுக்கு வர வேண்டும். பெண்கள்தான் சமுதாயத்தில் ஓரு மாற்றதைக் கொண்டு வர முடியும். இதற்குப் பெண்கள் உழைக்க வேண்டும்.
தலைமையைத் தேடிச் செல்லாமல் தலைவர்களாக வர முயற்சி செய்ய வேண்டும், சமுதாயத்தில் ஆண், பெண் சம உரிமை பெற்றால்தான் பெண் சமூகம் உயரும் என்றார் அவர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்வதை பெண்கள் தடுக்க வேண்டும். சிறு வயதில் திருமணம் நடப்பதால் பெண்கள் முழுமையாக கல்வியைப் பெற முடியாத அளவுக்கு சூழல் ஏற்படுகிறது என்றார்.
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஏமன் நாட்டில் இருந்து வரும் 15 பெண்களுக்கு இலவச கல்வி பொறியியல் படிக்கவும் மற்றும் ஆராய்ச்சிக் கல்வி கற்கவும் ஓப்பந்தம் செய்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் உள்பட பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com